Welcome to Book Space
வணக்கம் மக்களே.. welcome to “Book Space”
ஒரு நல்ல செய்திய உங்க கிட்ட பகிர்ந்துக்க வந்துருக்கேன்.
நான் கதை எழுத ஆரம்பிச்ச காலத்துல கதையில பணம் வரும்னு ஆரம்பிக்கல.. அப்படி சம்பாதிக்கலாம்னு கூட எனக்கு தெரியாது. ரெண்டு மூணு வருசம் எழுதுனப்புறம் நிறைய பேர் என் கதைய அமேசான்ல போட சொன்னாங்க.
அங்க பணம் வரும்னு நினைச்சு நான் போடல.. நிறைய பேர் ஆசைப்பட்டு கேட்டதால செஞ்சேன். அங்க நிறைய கதைகள நான் போடவும் இல்ல. குறிப்பிட்ட சில கதைகள் மட்டும் தான் எப்பவும் இருந்தது.
மற்ற கதைகள் எப்பவும் பிரதிலிபில தான் இருந்தது. உங்களுக்கே தெரியும்.
இப்ப அமேசான் அக்கவுண்ட் போயிடுச்சு. ஏன்னு தெரியல.. நிறைய எழுத்தார்களோட அக்கவுண்ட் காரணமே இல்லாம மூடிடுறாங்க. என்னோடதும் போச்சு.
அதுக்கு ஆல்டரா இருக்கனும்னு யோசிச்சு தான் இந்த “Book Space” சைட்ட உருவாக்குனேன்.
இதுக்காக நான் செலவும் பண்ணிருக்கேன். அது வேற விசயம். ஆனா அதே மாதிரி கொண்டு வர முடியுமானு யோசிச்சு உருவாக்குனது தான் இது.
இங்க என்னோட எல்லா முடிந்த கதைகளும் இருக்கும். அத பணம் கட்டி குறிப்பிட்ட சில நாட்களுக்கு படிக்கிற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட வாடகைக்கு புக் எடுக்குற மாதிரி.
“Dreamy universe” சைட்ல premium ல கதைகள் இருக்கு. அதுக்கு மாசம் ₹39 கட்டுற மாதிரி வச்சுருக்கேன்.
ஒரு மாசத்துக்கு முழுசா கட்டி படிக்க முடியாது. ஒரே ஒரு கதை மட்டும் தான் வேணும். அதுக்கு மட்டும் குறைவான பணம் கட்டி படிச்சுக்கலாமா? னு கேட்குறவங்களுக்கு தான் இந்த புது சைட். முக்கியமான விசயம்..
- இரண்டு சைட்டும் தனித்தனியா தான் இயங்கும்.
- இந்த சைட்ல இருக்கது முழுக்க முழுக்க முடிந்த கதைகள் தான்.
- ஆன்கோயிங் “Book Space” ல வராது. அது தேவையும் இல்ல இல்லையா?
- நேரடி புத்தகங்களோட கதைகளும் இங்க வரும்.
கிட்டத்தட்ட எல்லா கதையும் ரொம்பவே குறைவான விலையில தான் இருக்கும். நீங்களே செக் பண்ணி பாருங்க.
ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்கான என்னோட உழைப்பு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.
பிரதிலிபில இருக்க கதைகள் கண்டிப்பா இருக்கும். அத எடுக்க மாட்டேன்.
Dreamy universe சைட்ல இருக்கிற கதைகள்ல பல கதைகள் இந்த சைட்ல விற்பனைக்கு வரும். விருப்பமிருக்கவங்க அங்க பணம் கட்ட பிடிக்கலனா இங்க வாங்கி படிச்சுக்கோங்க.
இதுல நான் அறிவிக்க நினைச்ச முக்கியமான விசயம்…
ஒவ்வொரு வாரமும்.. ஞாயிற்றுக்கிழமை எதாவது ஒரு கதை ரெண்டு சைட்லயும் இலவசமா இருக்கும். ஞாயிறு நீங்க படிக்க விரும்பினா கண்டிப்பா செக் பண்ணி பாருங்க.
என்னோட கதைகள் “பிரதிலிபி, dreamy universe, Book Space, தூரிகை தமிழ் நாவல்கள்” இந்த நான்கு இடத்துல மட்டும் தான் இனி இருக்கும்.
அமேசானுக்கு திரும்பிப் போக விருப்பமில்ல. அங்க போனாலும் அக்கவுண்ட் மறுபடியும் தூக்க தான் செய்வாங்க.
இது வரை எனக்கு மட்டும் தனி இடம் போதும்னு இருந்தேன். ஒரு வேளை இந்த Book space ல யாருக்காவது கதைகள் போட விருப்பமிருந்தா எனக்கு “haninovels@gmail.com” இதுல மெயில் பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு click here 👈🏻
வேற எதாவது சந்தேகம் இருந்தாலும் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. பிரதிலிபில பண்ணாலும் சரி தான்.
சைட்ட மறக்காம செக் பண்ணி பாருங்க.. “Book Space“
“premium stories விரைவில் பதிவிடப்படும்”
💜💜💜
